1. Home
  2. தமிழ்நாடு

காளை மீது பவுடர் தூவினால் பரிசு கிடையாது..!

Q

வாடிவாசலில் சீறி வரும் காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்து வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளாக காளைகள் அவித்துவிடப்படுகின்றன. ஒவ்வொரு சுற்றுக்கும் கலர் கலர் வண்ண டி-சர்ட்களை அணிந்து களத்தில் இறங்கி வருகின்றனர். ஒவ்வொரு காளை அவிழ்த்து விடும்போதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அளிக்கப்படுகின்றன.

தற்போது வரை 8 சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. தற்போது 9வது சுற்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதனிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் மீது பவுடர் தூவி அழைத்து வருவதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில் பவுடர் தூவி அழைத்து வரப்படும் காளைகளுக்குப் பரிசு கிடையாது என்றும், அடுத்தாண்டு பங்கேற்க டோக்கனும் வழங்கப்படாது என்றும் மாவட்ட கலெக்டர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Trending News

Latest News

You May Like