பிளாட்பார்ம் டிக்கெட் இல்லை... பளார் விட்ட பெண் ஊழியர்...!

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்காதவர்களை சோதனை செய்யும் பணியில் துணை தலைமை டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா பணியில் இருந்தார். அப்போது, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வருகை தந்துள்ளனர்.
அவர்களிடம் பிளாட்பார்ம் டிக்கெட் உள்ளதா..? என கேட்டுள்ளார். அந்த இளைஞரோ தான் ரயில்வே எல்லையை ஒட்டிய பகுதியில் தான் நின்றதாகவும், தன்னிடம் அபராதம் செலுத்துவதற்கு பணம் ஏதும் இல்லை எனவும் கூறியுள்ளார்.பின்னர் அவர் பிளாட்பார்ம் டிக்கெட் இல்லாததை அடுத்து அலுவலகத்தில் கொண்டு வந்து விசாரணை நடத்தியுள்ளார்.
வடமாநில இளைஞர் வாக்குவாதம் செய்ய ஆத்திரமடைந்த டிக்கெட் பரிசோதகர் அக்ஷயா , இது எங்க ஊரு நான் இந்திலாம் பேச முடியாது எனக்கூறியதோடு, ஆவேசமாக எழுந்து அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பானது.இது அப்பகுதியில் இருந்த பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்கவில்லையென்றால் அவர் மீது அபராதம் அல்லது சிறை தண்டனை உட்படுத்தாமல் கை நீட்டி அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.