கோவம் வந்தா அவனை விட கெட்டவன் யாரும் இல்ல - வெளியான கேம் சேஞ்சர் படத்தின் டீஸர்..!
நடிகர் ராம் சரணை வைத்து 'கேம் சேஞ்சர்' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்.
இப்படத்தில் ராம் சரண் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நடிகை கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தமிழில் பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியிருக்கும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்
இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சற்றுமுன் இப்படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.