1. Home
  2. தமிழ்நாடு

“மக்களின் கருத்து கேட்டு சட்டம் இயற்ற வேண்டிய அவசியமில்லை” : வானதி சர்ச்சை பேச்சு!

“மக்களின் கருத்து கேட்டு சட்டம் இயற்ற வேண்டிய அவசியமில்லை” : வானதி சர்ச்சை பேச்சு!


மக்களிடம் கருத்துக்களை கேட்டு தான் சட்டங்களை இயற்ற வேண்டும் என்றால் எந்த சட்டத்தையும் இயற்ற முடியாது என்று பா.. துணை தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக சார்பில் கோவையில் நடைபெற்ற வேளாண் சீர்திருத்த மசோதா குறித்த கருத்து கேட்பு மற்றும் விளக்க ஆலோசனை கூட்டத்தில் பாஜக துணை தலைவர் கனகசபாபதி, வானதி சீனிவாசன் மற்றும் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய வானதி சீனிவாசன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களை கேட்காமலேயே சட்டத்தை இயற்றலாம் என தெரிவித்தார். அதற்கு சட்டத்தில் உரிமை உண்டு என்றும் அவர் கூறினார்.

வேளாண் மசோதா குறித்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினரின் கருத்துக்கு ஏற்கனவே தமிழக முதல்வர் தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டார் என்றும் மத்திய அரசு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது எனவும் அவர் கூறினார்.

மக்களுக்காக தான் சட்டமே இயற்றப்படுகிறது. ஆனால் மக்களை கேட்டுத்தான் சட்ட இயற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like