1. Home
  2. தமிழ்நாடு

இனி கூட்டணி இல்லை..! பாஜக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயக்குமார்..!

1

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்தபோது, அதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும், தலைமைக் கழக நிர்வாகிகளும், பொதுச்செயலாளரும் கண்டனம் தெரிவித்து, கண்டனம் தீர்மானத்தை கூட நிறைவேற்றினோம். அதன் பிறகு அண்ணாமலை திருந்திவிட்டார் என்று பார்த்தால், பாஜகவை விட, தன்னை முன்னிலை முன்னிலைப்படுத்த, இப்போது அண்ணாவை விமர்சித்துள்ளார். 

 அண்ணாவைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. இதோடு பேச்சை நிறுத்துங்கள் என்று பலமுறை எச்சரிக்கை விடுத்தோம். அ.தி.மு.க-வினர் இனிமேல் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்வார்கள். அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் என்பதை பா.ஜ.க தொண்டர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அண்ணாமலை விரும்பவில்லை.

பெரியாரை, ஜெயலலிதாவை, எடப்பாடியாரை பற்றி பேச உனக்கு என்ன தகுதி உள்ளது? தனக்கு வாழ்க கோஷம் போட வேண்டும் என்று அவர் எண்ணுகிறார். இதை ஒருபோதும் அதிமுக தொண்டன் ஏற்கமாட்டான். எங்க ஆளுங்க சும்மா விடமாட்டாங்க. இனி தாறுமாறாக எங்கள் ஐடி விங் பதிலடி தரும். இதை பற்றி பாஜக தலைமையிடமும் கூறிவிட்டோம். கூட்டணிக் கட்சிக்குள் இருந்துக்கொண்டு இப்படி பேசினால், எப்படி தொண்டர்கள் களத்தில் இணைந்து வேலை செய்வார்கள். 

அப்படி பா.ஜ.க-வை சுமக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பா.ஜ.க-வால் இங்கே காலூன்றவே முடியாது. எங்களை வைத்துதான் பா.ஜ.க-வுக்கு அடையாளமே. இனியும் பொறுத்துக்கொள்வதாக இல்லை. எனவே. கூட்டணியைப் பொறுத்தவரை பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணியில் இல்லை. 

இதுதான் எங்கள் நிலைப்பாடு. கட்சியின் கருத்தும் கூட. இனிமேல் அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரும்” என்றார்.

Trending News

Latest News

You May Like