Bun-க்கு GST இல்லை, ஆனா அதுக்குள்ள வைக்குற Cream-க்கு 18% GST..?
கோவை கொடீசியா வர்த்தக வளாகத்தில் ஜவுளி, நகை, ஓட்டல் உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகளை சேர்ந்தவர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனும் கலந்துகொண்டார்.
இந்தக்கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ கோவைக்கு பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. கோவை கொடிசியாவில் செயல்படுத்தப்பட்டுள்ள அடல் இன்னோவேஷன் திட்டம் நாட்டுக்கு முன்மாதிரியாக உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் 70 இடங்களில் சிட்பி வங்கி(தொழில் வளர்ச்சி வங்கி) திறக்க உள்ளோம். கோவையில் இந்த வங்கி மூலம் மட்டும் ரூ.516 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.5 ஆண்டுகளுக்கு 1 கோடி இளைஞர்கள் தொழில் திறன் பயிற்சி பெற தொழில் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்ட ரூ.10 லட்சம் கடனை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
முத்ரா திட்டத்தில் நாட்டில் 49.5 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். இதில் தமிழகத்தில் 5.6 கோடி பேரும், கோவையில் 20 லட்சம் பேரும் பயன் அடைந்துள்ளனர். கோவையில் மட்டும் ரூ.13,180 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி. குறைப்பு தொடர்பாக இங்கு பல்வேறு அமைப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கண்டிப்பாக கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும். என்றார்.
பின்னர் தொழில் முனைவோர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சீனிவாசன் பேசும்போது, இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. உள்ளது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் உள்ளது. ஒரே பில்லில் ஒரு குடும்பத்துக்கு வெவ்வேறு வகையான ஜிஎஸ்டி போட்டு கொடுப்பது கஷ்டமாக உள்ளது. பன்-க்கு ஜிஎஸ்டி இல்லை. ஆனால் அதுக்குள்ள வைக்கிற க்ரீம்-க்கு 18% ஜிஎஸ்டி உள்ளது. வாடிக்கையாளர் என்ன சொல்கிறார்கள் என்றால் நீ பன் கொண்டுவா கிரீம்,ஜாம் எல்லாம் நானே வெச்சுக்கிறேன் அப்படிங்கிறாங்க. கடை நடத்த முடியல.” என்றார். மோட்டார் பம்ப் தொழில்துறையினரும் ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தனர்.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் அமைப்பினர் தங்களது கோரிக்கைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தனர்.அந்தவகையில், தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன், ஜிஎஸ்டி வரி விதிப்பால் உணவகம் நடத்துபவர்கள் சந்திக்கும் சிரமங்களை எடுத்துரைத்தார்.
"இனிப்புக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12 சதவீதம் இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும்.அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல.. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18 சதவீதம் ஜி.எ.ஸ்.டி..வாடிக்கையாளர்களால் இதை புரிந்துகொள்ல முடிவதில்லை. அவர்கள், ‘ரெண்டையும் தனித்தனியா கொடுங்க, நாங்களே சேர்த்துக்கிறோம்’ என்கிறார்கள். கடை நடத்த முடியல மேடம்... ஒரே மாதிரி வையுங்கள்.ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்..'' என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.அதேபோல், தங்கும் விடுதிகளுக்கு 18% ஜி.எஸ்.டி., வரியையும் மாற்றி அமைக்க நடவடிக்கை வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
#Watch | "Bun-க்கு GST இல்ல.. அதுக்குள்ள வைக்குற Cream-க்கு 18% GST.. கடை நடத்த முடியல மேடம்"
— Sun News (@sunnewstamil) September 11, 2024
கோவையில் தொழில்துறையினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் புலம்பிய ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக… pic.twitter.com/m3TP3Q8ujZ