1. Home
  2. தமிழ்நாடு

இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை... வெள்ளி விலையில் மாற்றம்..!

Q

சென்னையில் டிசம்பர் 6 ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 200 குறைந்தது. இதனால் சவரன் ரூ 56,920 க்கு விற்பனை செய்யப்பட்டது. அது போல் கிராமுக்கு ரூ 25 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ 7,115-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ 101-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 1,01,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏற்றமும் தாழ்வும் இருந்து கொண்டே இருக்கிறது. இஸ்ரேல் - காசா போர், இஸ்ரேல் - ஈரான் மோதல், அமெரிக்க அதிபர் தேர்தல் போன்றவற்றால் தங்கத்தின் விலை ரூ 60 ஆயிரத்தை நெருங்கியது. இதனால் சாமானிய மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ 1 லட்சத்தை தாண்டும் என பொருளாதார நிபுணர்கள் கணித்தனர்.

இந்நிலையில் இன்று டிசம்பர் 7ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை கூடுமோ குறையுமோ என எதிர்பார்த்திருந்த நிலையில் அதன் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே நீடிக்கிறது. இதனால் இன்று ஒரு சவரன் ரூ 56,920-க்கும் ஒரு கிராம் ரூ 7115 -க்கும் விற்பனையாகிறது. அதே வேளையில் வெள்ளியின் விலையில் ரூ 1 குறைந்து ஒரு கிராம் ரூ 100-க்கும் ஒரு கிலோ ரூ 1,00,000-க்கும் விற்பனையாகிறது.

Trending News

Latest News

You May Like