1. Home
  2. தமிழ்நாடு

"முழு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பே இல்லை" : ஆட்சியர் திட்டவட்டம்!

"முழு பொதுமுடக்கத்திற்கு வாய்ப்பே இல்லை" : ஆட்சியர் திட்டவட்டம்!


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பு சென்னையில் அதிக பாதிப்பு இருந்தநிலையில் தற்போது பிற மாவட்டங்களிலும் நோய் பரவல் வேகமாக உள்ளது. 

வேலூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒரு வாரமாக பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு ஆயிரத்து 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 246 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 845 பேர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் வேலூரில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுந்த நிலையில், அதற்கு மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என்றும் தற்போதைய நடைமுறையே தொடரும் எனவும் ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like