1. Home
  2. தமிழ்நாடு

எனது நரம்பில் ரத்தம் ஓடவில்லை, சிந்தூர் தான் ஓடுகிறது : பிரதமர் மோடி ஆவேசம்!

Q

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் மேம்படுத்தப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் பயங்கவரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மனைவிகளின் குங்குமத்தை அழித்தவர்களை நாம் அழித்துள்ளோம். 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்தால் அதிரடியாக கொல்லப்பட்டனர்.

22-ஆம் தேதி தாக்குதல் நடத்தியதற்கு 22 நிமிஷத்தில் பதிலடி கொடுத்துள்ளோம். 9 பயங்கரவாதிகள் முகாம்களை அழித்துள்ளோம். இந்திய ராணுவம், விமானப்படை, கப்பல் படை ஆகிய முப்படைகளின் சக்கரவீயுகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டது. குங்குமம் வெடிமருந்தாக மாறும் போது என்ன நடக்கும் என்பதை எதிரிகளும், உலக நாடுகளும் பார்த்திருக்கிறார்கள். பாரத மாதாவின் சேவகனான மோடி, நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன்.

மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும். ஆனால், எனது ரத்தம் கொதிக்கிறது. எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை. சிந்தூர்தான் ஓடுகிறது. மக்களின் ஆசிர்வாதத்தாலும், இந்திய ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றி உள்ளோம். இந்தியாவுக்கு சொந்தமான நீரை பாகிஸ்தான் பெற முடியாது.

இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரிய விலையை கொடுக்க வேண்டும். பாகிஸ்தானால் இந்தியாவை நேரடியாக வெற்றி பெற முடியாததால் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது. பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட தோட்டாக்கள் 140 கோடி இந்தியர்களின் இதயத்தை காயப்படுத்தியது. முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா அமைதியா இருக்கும் என்று நினைத்தவர்கள் வீடுகளில் பயந்து ஒழிந்து கொண்டனர். தங்கள் நாட்டு ஆயுதங்கள் குறித்து பெருமை கொண்டவர்கள் மண்ணுக்கு அடியில் புதைந்துள்ளனர். பாகிஸ்தானுடன், வர்த்தகமும் இல்லை, பேச்சவார்த்தையும் இல்லை, ஒரு வேளை பேச்சுவார்த்தை நடத்தினால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் குறித்து தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று பிரதமர் மோடி பேசினார்.

Trending News

Latest News

You May Like