பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு... பாஜக கட்சி பொறுமையாக இருக்காது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை..!!

 | 

மகாகவி பாரதியாரின் 140-வது பிறந்த நாள் விழா, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாரதியாரின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,

“தமிழ்நாடு காவல்துறை மிக மோசமாக செயல்படும் காவல்துறையாக ஆக உள்ளது. காவல்துறை ஒரு கட்சியை சார்ந்த ஏவல் துறையாக உள்ளது.

சைக்கிளில் செல்லவும் செல்பி எடுப்பதற்குமா டிஜிபி; நேர்மையான டிஜிபியாக இருந்தால் பிபின் ராவத் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்; கட்சி பொறுமையாக இருக்கிறது, பொறுமையும் ஒரு அளவுக்குத்தான், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

தமிழ்நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு இடமில்லாமல் போய்விட்டது.” என்று கூறினார்.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP