1. Home
  2. தமிழ்நாடு

பூஜைகள் நடக்கும் போது மணி அடிப்பதில் இவ்வளவு அற்புதங்கள் இருக்கா...!

1

பூஜை செய்யும் போது மணி அடிப்பது வழக்கம். சாதாரண மணி தானே என நாம் எண்ணிவிடக் கூடாது மணி அடிப்பதால் உள்ள நன்மை மற்றும் அதன் முக்கியத்துவம் பல உண்டு. மணி அடிப்பதிலும் பல வகை உண்டு.

மணி அடிப்பதிலும் ஒரே மாதிரியாக மணியை அடிக்கக் கூடாது.
மெதுவாகா மணியை அடித்தால் அகர்பத்தி சமர்பிக்கப்படுகிறது என்று பொருள்.
கணகணவென்று அடித்தால் சாமிக்கு தீபம் அல்லது தூபம் காட்டப்படுகிறது என்று பொருள்.
இரண்டு பக்கமும் விசேஷமாக அடித்தால் திருமஞ்சனம் நடக்கிரது என்று பொருள்.
மெதுவாக சீராக அடித்தால் இறைவனுக்கு அமுது படைக்கப்படுகிறது என்று பொருள்
மணி அடிப்பதன் தொனியை வைத்தே கோயிலில் நடக்கும் பூஜைகள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

மனியை எப்போதும் நம் இடது கையால் எடுக்கக் கூடாது. மணியை வலது கையில் எடுடதது பின்னர் இடது கையில் மாற்றிக் கொண்டு, வலது கையால் கற்பூர தட்டை எடுத்து ஆரத்தி காட்ட வேண்டும்.அதே போல் மணியை கீழே வைக்கும் போதும் இடது கையால் வைக்காமல் வலது கையில் மாற்றி கீழே வைக்க வேண்டும்.

மணியின் கண்டை என்பது சாதாரணமானதல்ல. மணிகளில் ஓம் என்ற பிரணவம் ஒளிந்திருக்கிறது. தேவதைகளை வரவழைத்து துஷ்ட ப்ரக்ருதிகளை ஓட்டுகின்றது.


பகவானுக்கு அமுது படைக்கும் போது நிசப்தமாக இருக்க வேண்டும். அமங்கல பேச்சுக்கள் காதில் விழக்கூடாது என்பதற்காக மணி அடிப்படுகிறது. அதனால் அப்படிப் பட்ட பேச்சுக்கள் காதில் விழாது.


பூஜையின் போது அடிக்கப்படும் காண்டமணி மிக சம்பதமாக ஒலித்து பிற தீங்கான சப்தங்கள் அழுத்திப் போகச் செய்யும்.


உலக வாழ்க்கையிலிருந்து இறைவன் தன் பக்கம் அழைக்கும் ஒலியை எழுப்புகின்றது மணியோசை.


இதனால் திருநாவுக்கரசர், “ஓசை ஒலியெல்லாம் ஆனாய் போற்றி” என சிவபெருமானை போற்றி பாடியுள்ளார்.

மணியோசை எழுப்பும் இடத்தில் தீய சக்திகள் அண்டாது என்பது ஐதீகம். வழிபாட்டின் போது வீட்டிலும் பூஜை மணி ஒலிப்பது நன்மை தரும்.

Trending News

Latest News

You May Like