திரை உலகில் வாய்ப்புகள் வரவில்லை... கவர்ச்சி பக்கம் திரும்பிய நடிகை ரித்திகா சிங்..!

இறுதிச் சுற்று படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை ரித்திகா சிங். முதல் படம் சூப்பர் ஹிட் என்பதால் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கு வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அந்த வகையில் விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” போன்ற படங்களில் நடித்தார்.
பெரிய நடிகர்கள் படங்கள் என்றாலும், இந்த படத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது ஏமாற்றத்தை கொடுத்தது. பின்னர் நடிகர்கள் முக்கியம் இல்லை... கதை தான் முக்கியம் என்பதை தெரிந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.அப்படி இவர் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படம் தான் "ஓ மை கடவுளே", அசோக் செல்வன் ஜோடியாக ரித்திகா சிங் நடித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது.
தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'வேட்டையன்' படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் வெளியான இறுதிசுற்று படத்தின் ரீமேக்கிலும் அவரே நடித்திருந்தார். தொடர்ந்து நடித்துக் கொண்டு இருந்தாலும் ரித்திகா சிங்குக்கு எதிர்பார்த்த அளவுக்கு திரை உலகில் வாய்ப்புகள் வரவில்லை.
இதைத் தொடர்ந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் சிறப்பு போட்டோ சூட் எடுத்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரித்திகாசிங். சமீபகாலமாக நடிகைகள் பலர் கவர்ச்சி தோற்றங்களை தங்களது வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரித்திகா சிங் புகைப்படங்களை வெளியிட்டு கவர்ச்சி போட்டிக்கு தயாராகி இருக்கிறார்.