1. Home
  2. தமிழ்நாடு

இனி தமிழகத்தில் ஏழைகளே இல்லை! தமிழக அரசு அறிவித்த சூப்பர் திட்டம் அடுத்த மாதம் தொடக்கம்..!

1

 திமுக ஆட்சியில் முதல்வர் தாயுமானவர் திட்டம் தொடங்கப்பட்டது. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 2024–25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ​​இந்த அறிவிப்பை வெளியிட்டார்

தமிழகத்தில் வரும் 2 ஆண்டுகளுக்கு வறுமையை குறைக்கும் விதமாக முதல்வரின் தாயுமானவர் திட்டம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் பிப்ரவரி 19, 2024 அன்று அறிவிக்கப்பட்டது . 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, ​​சட்டசபையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வறுமையை போக்க தமிழக அரசு தாயுமானவர் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.27,922 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இது ஏறக்குறைய ஐந்து லட்சம் ஏழைக் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க முயல்கிறது. 

ஆதரவற்றோர் தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும். அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராம சபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுக்க மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும். முதல்வரின் தாயுமானவர் திட்டம் என்ற பெயரில் இந்த புதிய திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும்.

இந்நிலையில் இந்த திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

முதல்வரின் தாயுமானவர் திட்டத்தில், ஏழை குடும்பங்களை எந்த அடிப்படையில், எவ்வாறு கண்ட றிய வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு, இன்று பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளன. முதலில் சோதனை அடிப்படையில், ஐந்து மாவட்டங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டங்கள் என்ற விபரமும், திட்ட செயல்பாடு குறித்த விபரங்களும், லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் வெளியிடப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Trending News

Latest News

You May Like