1. Home
  2. தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லை... மருத்துவர்கள் இல்லை இப்போ பாதுகாப்பும் இல்லை - வானதி சீனிவாசன்..!

1

கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவும், பாஜக மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

உக்கடம், இராமநாதபுரம் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை உள்ளது. அதை செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறோம். அதை ஏற்படுத்தி கொடுக்க முயன்றால் கவுன்சிலர் இடையூறாக இருக்கிறார். மாநில அரசின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல அனைத்து விதமான ஒத்துழைப்பையும் கொடுத்து வருகிறோம். ஆனால், உள்ளாட்சி அமைப்பினர் தடையாக இருக்கின்றனர். நாங்கள் எடுக்கும் திட்டத்திற்கு அரசு நிலம் கொடுக்காதது வருத்தம் அளிக்கிறது.

கிண்டி அரசு மருத்துவர் பாலாஜி மீது கத்தி குத்து என்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அரசு மருத்துவமனையில் மருந்துகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை இவ்வளவு பிரச்சனைக்கு மத்தியில் மருத்துவர்கள் பணி செய்து வருகின்றனர். அரசு மருத்துவமனை நிலை மிக மோசமாக உள்ளது. மருத்துவ துறையில் முன்னுதாரணமாகக் இருக்கிறோம் என தமிழ்நாடு அரசு சொல்லி கொள்வது ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் நேரம் இது. அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறி ஆகியுள்ளது. உள் கட்டமைப்பு சரியாக இல்லை. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு பொதுமக்களுக்கு மிகுந்த அச்சம் உள்ளது.

மக்களுக்கு நல்ல மருத்துவம் கொடுப்பதற்காக ஆயுஸ்மான் திட்டத்தை கொண்டு வந்து மத்திய அரசு 60 சதவீதம் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், ஆயுஸ்மான் பாரத் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் முன்னுரிமை கொடுப்பது இல்லை. முதல்வர் திட்டத்தில் வராத திட்டங்கள் கூட ஆயுஸ்மான் திட்டத்தில் வருகிறது. 70 வயதிற்கு மேற்பட்டவர்களும் இத்திட்டத்தில் முழுமையான பலனைப் பெற முடியும். உலக நாயகன் என்ற பட்டத்தை துறக்க கமலஹாசன் ஏன் இந்த மனமாற்றம் வந்துது என தெரியவில்லை. அமரன் படம் கொண்டு வந்த உலக நாயகனுக்கு நன்றி.

ஜம்மு காஷ்மீர் அமைதியாக இயங்கி வருவதற்கு காரணம் பிரதமர். அமரன் படத்தில் எந்த இடத்தில் பொய் உள்ளது சொல்ல சொல்லுங்கள். முதல்வரே பாராட்டி விட்டார் அமரனை. மதத்தை வைத்து அரசியல் செய்ய கூடிய ஒருசிலர் தமிழ்நாட்டில் பிரச்னைகளை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். மோடி எந்த திட்டங்களுக்கும் தன் பெயரை வைக்கவில்லை. ஆனால், தொடர்ந்து அரசின் அனைத்து திட்டங்களுக்கும் கலைஞரின் பெயரை வைத்து வரலாற்றிலேயே அவர் மட்டும்தான் உள்ளார் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like