திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது! வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விளாசல்..!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில்,
நீலகிரி, குன்னூரில் இந்தி திணிப்பை கண்டித்து திமுகவினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். அத்துடன், "இந்தியை தமிழ்நாட்டில் நுழைய விடமாட்டோம்” என உறுதிமொழி எடுத்துக் கொண்டிருந்தபோது, திமுக 25வது வார்டு கௌன்சிலர் ஜாகீர்உசேன், அருகில் நின்று கொண்டிருந்த பெண்ணின் வளையலை நைசாக உருவும் காணொளியை அண்ணாமலை தனது 'X' தளத்தில் வெளியிட்டு, "திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது" என பதிவிட்டுள்ளார்.
இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் திரு ஜாகிர் உசேன்.
— K.Annamalai (@annamalai_k) March 4, 2025
திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது! pic.twitter.com/1wQKadFcnY