சிறப்பு காட்சிகள் வெளியிடும் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்..!
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, கன்னடம்,இந்தி என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது. விஜய்க்கு ஜோடியாக 14 ஆண்டுகள் கழித்து நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சஞ்சய்தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன்,சாண்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் வெளியாவதற்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில் படத்தின் வெளியீட்டுப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும், தமிழ்நாட்டிலும் முன்பு எப்போதும் இல்லாத அளவில் அதிக அளவிலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 'லியோ' திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் வெளியிடும் திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி, மயிலாடுதுறை சுற்றுவட்டார புகார்களுக்கு 04364-222033, 9498100907, 9442003309 எண்களையும் சீர்காழி சுற்றுவட்டார பகுதி புகார்களுக்கு 9498100926, 04364 270222, 9498100908, 9498100926 என்ற எண்களிலும் அழைத்து புகார் கூறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.