ராணுவம் தொடர்பான புகைப்படங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிய இளைஞர்.. விசாரணையில் அதிர்ச்சி !!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார்(21). இவர் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் தங்கி ராணுவப் பகுதியில் ஒரு கட்டுமான இடத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
சஞ்சீவ் குமார் அங்கு பணிபுரிந்துவரும் அதே பகுதியில் ஸ்கூல் ஆஃப் பீரங்கி, பீரங்கி மையம் மற்றும் காம்பாட் ஆர்மி ஏவியேஷன் பயிற்சி பள்ளி போன்ற பாதுகாப்பு நிறுவனங்கள் உள்ளன. இது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் வெளி ஆட்கள் உள்ளே நுழையவும் புகைப்படம் இப்பகுதியை புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்கு நுழைந்த சஞ்சீவ் குமார் ராணுவ மையத்தை புகைப்படம் எடுத்துள்ளார். இதனை கண்ட ராணுவத்தினர் அந்த இளைஞரை பிடித்து விசாரித்துள்ளனர். மேலும் அவரது செல்போனை பறித்து ஆய்வு செய்தப்போது, ஏற்கனவே பலமுறை புகைப்படங்கள் எடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை தனியாக அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தியப்போது, சஞ்சீவ் குமார் ராணுவம் தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்களை பாகிஸ்தானில் உள்ள ஒரு குழுவுக்கு பகிரிந்து கொண்டது தெரியவந்தது.
இதனை அடுத்து சஞ்சீவ் குமாரை கைது செய்த ராணுவத்தினர் தியோலாலி போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் அந்த நபர் மீது அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு பாகிஸ்தானுடன் தொடர்பு ஏற்பட்டது எப்படி? யாருக்கெல்லாம் புகைப்படங்களை அனுப்பினார்? இவருக்கு கூட்டாளி அல்லது பாஸ் யாரும் உள்ளனரா? எனவும் போலிசார் விசாரிக்கின்றனர்.
newstm.in