ரூ.2.4 கோடிக்கு வாங்கிய மெர்சிடஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்.. கோளாறு ஏற்பட்டதால் ஆத்திரம் !

ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல யூ டியூப்பர் மிகைல் லிட்வின் என்பவர், 2.4 கோடி ரூபாய் மதிப்பில் மெர்சிடஸ்-ஏஎம்ஜி ஜிடி 63எஸ் மாடல் காரை புதிதாக வாங்கினார்.
ஆசையாக வாங்கிய புதிய கார் அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அதாவது காரை வாங்கிய நாள் முதல் அடிக்கடி காரில் கோளாறு ஏற்பட்டுக் கொண்டே இருந்ததே இதற்கு காரணம்.
இதனால் காரில் கோளாறு ஏற்பட்டதும், சர்வீஸ் மையத்துக்கு அனுப்புவதும், அங்கிருந்து வந்த சில நாட்களில் கார் மீண்டும் கோளாறு ஏற்படுவதுமாக இருந்துள்ளது. இதுபோல் 5 முறை நடந்துள்ளது.
அதற்குள் காரில் இருந்து சில முக்கிய பாகங்கiளயும் மிகைல் லிட்வின் மாற்றியப்போதும் அது சரியாகவில்லை.
அதன்பிறகும் கோளாறு ஏற்பட்ட போது டீலரை தொடர்பு கொண்டால் அவர் போனை எடுக்காததால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றார்.
அதன்பின், மெர்சிடஸ் காரை, காலியாக உள்ள வயல் வெளிக்கு கொண்டு சென்று தீ வைத்து எரித்து விட்டார். இதனை வீடியோவாக பதிவு செய்து அவற்றை யூ டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் 1.10 கோடி பேருக்கு மேல் பார்த்துள்ளனர்.
newstm.in