செல்ஃபி எடுக்கும் போது தன்னைத் தானே சுட்டுக் கொண்ட இளைஞர்!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசிப்பவர் ஹிமான்ஷு குமார். இவர் நேற்று தனது தந்தையின் துப்பாக்கியை தலையில் வைத்துக்கொண்டு சுயப்படம்(செல்ஃபி) எடுக்க முயன்றபோது தவறுதலாக துப்பாக்கியின் பட்டனை அழுத்தியுள்ளார். இதனால் பலத்த சத்தத்துடன் வெடித்து குண்டுகள் பாய்ந்ததில் ஹிமான்ஷு ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார்.
உடனடியாக சத்தம் கேட்டு வந்த அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் மரணமடைந்துவிட்டார். இதுகுறித்து விசாரித்து வருவதாக உள்ளூர் காவல் நிலைய பொறுப்பாளர் தினேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.