காதலிப்பதாக கூறி பிக்பாஸ் ஜூலியிடம் ரூ.2.30 லட்சம் சுருட்டிய இளைஞர்!!

தன்னை ஒருவர் காதலிப்பதாகக் கூறி சுமார் ரூ.2.30 லட்சம் மோசடி செய்திருப்பதாக பிக்பாஸ் ஜூலி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நெட்டிசன்களால் வைரல் செய்யப்பட்டு பிரபலமானவர் ஜூலி. அதன்பிறகு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் செலிபிரேட்டி அந்தஸ்தை பெற்றார்.
அதனை தொடர்ந்து குறும்படங்களில் நடித்து வந்த ஜூலி சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர் புனித தோமையர் மலை பகுதியில் வசித்து வருகிறார். இவரும் அமைந்தகரை பகுதியை சேர்ந்த மனிஷ் (26) என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்ததாக ஜூலி தெரிவித்துள்ளார்.
மனிஷ் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும்; திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னிடமிருந்து அவர் பணம் பெற்று அதன்மூலம் பல்சர் வாகனம், பிரிட்ஜ் மற்றும் இரண்டு சவரன் செயின் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது அனைத்தையும் பெற்றுக்கொண்ட பின்னர் மனிஷ் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் ஜூலி புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து இவ்விஷயத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
newstm.in