செய்வதை எல்லாம் செய்துவிட்டு பெண்ணைக் கர்ப்பிணி ஆக்கி தலைமறைவான வாலிபர்!
திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக மேலாளராகப் பணியாற்றி வருகிறார் ஷாலினி (வயது 27). எம்ஏ பட்டதாரி. ( பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாகப் பால்பண்ணை விஸ்வாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னையன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் தனிமையில் சந்தித்தனர். அப்போது திருமண ஆசை காட்டி பொன்னையன் ஷாலினியுடன் உல்லாசமாக இருந்தார். இதில் அவர் கர்ப்பம் ஆனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முறையிட்டார்.
அப்போது பொன்னையன் கர்ப்பமாக இருக்கும்போது திருமணம் செய்து கொண்டால் அக்கம் பக்கத்தினர் அசிங்கமாகப் பேசுவார்கள். கர்ப்பத்தை கலைத்து விடு. நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என உறுதி அளித்தார். இதை நம்பிய ஷாலினி தனது கர்ப்பத்தை கலைத்தார். அதன் பின்னர் திருமணத்தைத் தள்ளிப் போட்டார்.
இதனால் மனமுடைந்த ஷாலினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே தகவல் அறிந்த பொன்னையன் காதலியைப் பார்க்க ஓடிச் சென்று மருத்துவமனையில் அவரைக் கவனித்துக் கொண்டார். அப்போது மீண்டும் திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்ததால் உறவினர்கள் பிரச்சனையைக் காவல்துறைக்கு தெரியப்படுத்தாமல் மறைத்து விட்டனர்.
பின்னர் மருத்துவ மனையிலிருந்து ஷாலினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினார். அதன் பின்னர் பொன்னையன் அவருடன் ஆன உறவைத் துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாலினி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் கமிஷனர் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பொன்னையன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை வலை வீசித் தேடி வருகின்றனர்.