ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் மோசமான சாதனை !
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் மோசமான சாதனை !

13 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல் முதலாக புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது அவ்வணியின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது
ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் சிஎஸ்கே அணியின் போட்டி அமையும்.
கடந்த 12 ஆண்டுகளில் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் சிஎஸ்கே அணி புள்ளிகள் பட்டியலில் எப்போதும் முன்னணியில் தான் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று வரை ஏழாவது இடத்தில் இருந்த சிஎஸ்கே அணி இப்போது புள்ளிகள் பட்டியலில் 8-வது இடத்திற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது. 3 போட்டிகளில் ஆடியுள்ள சென்னை அணி ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.
எட்டாவது இடத்தில் இருந்து ஹைதராபாத் அணி தற்போது ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று தோல்வி அடைந்ததால் டெல்லி அணி முதலிடத்தை இழந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது முதலிடத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி எட்டாவது இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளது அந்த அணியின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ரெய்னா இல்லாததே அணியின் பின்னடைவுக்கு காரணம் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
எனவே இனிவரும் போட்டிகளில் வெற்றிகளை குவித்து புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி முன்னேற வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
A look at the Points Table after Match 11 of #Dream11IPL. pic.twitter.com/NT3MW4O7fS
— IndianPremierLeague (@IPL) September 29, 2020
newstm.in