உலக கோப்பை தொடர்... இந்திய அணிக்கு பேரதிர்ச்சி..!

இந்திய அணி கடந்த அக்டோபர் 19ஆம் தேதி புனேவில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மைதானத்தில் பந்தை துரத்தி செல்கையில் கால் இடறி கீழே விழுந்துவிட்டார். இதன் காரணமாக அந்த ஓவரில் விராட் கோலி பந்து வீசி நிறைவு செய்து இருந்தார்.
காயம் காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஹர்த்திக் பாண்டியா நேரடியாக அரையிறுதி போட்டிக்கு உடல் தகுதி பெற்று இந்திய அணியில் இணைவார் என கூறப்பட்டது. இதற்காக ஒருநாள் பேட்டிங் பயிற்சியில் கலந்து கொண்டார்.
ஆனால் காயம் காரணமாக அரைஇறுதிப் போட்டியிலும் அவரால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா பாண்ட்யா விலகியுள்ளார். அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்படுவார் என பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.