1. Home
  2. தமிழ்நாடு

திருப்பதி பெருமாள் சிலையின் அதிசயம்..!

1

திருப்பதிக்கு சென்று வந்தால் வாழ்க்கையின் தீரா துயர் நீங்கும் என்ற சொல் பலிப்பதன் காரணமாக மக்கள் நாடி செல்கின்றனர்.தினமும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வரும் திருப்பதி தேவஸ்தாலம் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிய, எம்பெருமானின் அளிக்கொடுக்கும் அருள் தான் காரணம்.


திருப்பதி பெருமாள் சிலையின் அதிசயம்:

அப்படிப் பட்ட திருப்பதி ஆலையத்தில் உள்ள பெருமாளின் சிலை எப்போதும் 110 ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கின்றதாம்.


3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது திருமலை திருப்பதி கோயில். பொதுவாக உயரத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பது வழக்கம்.ஆனால் பெருமாள் சிலை இவ்வளவு வெப்பநிலையுடன் இருப்பது அதிசயமாக பார்க்கபடுகின்றது.

பெருமாளுக்கு தினமும் காலை 4.30 மணிக்க் குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இருப்பினும் அபிஷேகம் முடிந்த உடன் பெருமாளுக்கு வேர்க்கின்றதாம். அதானல் பெருமாலை பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.


வியாழக் கிழமை ஒருமுறை பெருமாள் நகைகளை கலைந்து துளசி மாலையுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.அப்படி பெருமாளின் உடலிலிருந்து ஆபரணங்கள் எடுக்கும் போது ஆபரணங்கள் சூடாக கொதிக்கின்றன.


திருமலையில் திருப்பதி ஆலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ள ‘சிலாதோரணம்’ என்ற பாறை உள்ளது இது சுமார் 250 கோடி வருடங்கள் பழமையானது என கூறப்படுகிறது. இரு பெரிய பாறைகள் முத்தமிட்டுக் கொள்வது போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளது.

Trending News

Latest News

You May Like