கொரோனா சிகிச்சைக்கு ஆம்புலன்ஸில் சென்ற பெண் மாயம்.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. போலீஸ் தகவல் !

கர்நாடகா மாநிலம் பெங்களூர் பொம்மனஹள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் கடந்த 4ஆம் தேதி தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்றுள்ளார்.
கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தவேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அதன்பின் அப்பெண்ணிடம் இருந்து எந்த தகவலும் இல்லையென குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அப்பெண் செல்போனை அவர் எடுத்துச்செல்ல ஆம்புலன்சில் வந்தவர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கூறி குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.
இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்தனர். மேலும் அந்தப் பெண் கடைசியாக தங்கியிருந்த டெல்லி பகுதியிலும் தேடியுள்ளனர்.
கொரோனா உறுதியானதாக கூறியப்போதும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என சொன்னபோதும் அவர்கள் கேட்கவில்லை.
பாதிப்பின் இரண்டாம் கட்டத்தில் இருப்பதால், மருத்துவமனையில் சேர்க்கவேண்டும் என்று ஆம்புலன்ஸில் வந்தவர்கள் கூறியதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அவர் வெளியே சென்றிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அப்பெண்ணே போலியாக ஆம்புலன்ஸை வரவைத்து அதன்மூலம் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
newstm.in