கற்பழித்து, சீல் பெல்ட்டால் கழுத்தை நெறித்து காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட பெண்!
பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து பிறகு கழுத்தை சீட் பெல்ட்டால் நெறித்து, ஓடும் காரில் இருந்து பெண் ஒருவர் சாலையில் தூக்கி வீசப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. அந்த பெண்ணுடன் காரில் சென்ற உறவினரே அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற உறவினருடன் அந்தப் பெண் சண்டையிட்டார்.
இதனால் அவரை தாக்கிய அந்த நபர் சீட்பெல்ட்டால் அப்பெண்ணின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் அந்தப் பெண் சுயநினைவை இழக்கவும், இறந்துவிட்டார் என்று நினைத்து காரிலிருந்து வெளியே தூக்கி எரிந்துள்ளார்.
உ.பி. எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தின் ஊழியர்கள் சப்லி கெரா கிராமத்திற்கு அருகே அந்த பெண் சாலையில் கிடப்பதை பார்த்தனர். அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த கோரச் செயலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in