கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்!!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வந்த மகேஸ்வரி என்பவரை சுமார் 12 முறை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இருந்த பொழுதும் அவருடைய கூட்டாளிகள் தொடர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் கோயில் திருவிழாவின் போது சாராய கும்பல் மற்றும் இளைஞர்கள் இடைய மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. மோதல் காரணமாக இளைஞர்கள் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்நிலையில் சாராய வியாபாரியின் அடியாட்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து அப்பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் கை, கால், மண்டைகள் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக வாணியம்பாடி தாலுகா போலீசார் தகராறில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த புகாரில் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் (35) என்பவரை கைதுசெய்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிகிறது. இதனை அறிந்த அவருடைய மனைவி மணிமேகலை (30) குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டத்தில் மண்எண்ணெய் தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
வாணியம்பாடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மண்ணெண்ணெய் கேனை பிடிங்கி வெளியே கொண்டு வந்தார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் திருப்பத்தூர் நகர காவல்நிலையத்திற்கு மணிமேகலை அழைத்துச் செல்லப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் திடீரென பெண் ஒருவர் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
newstm.in