செல்போனில் பேசியப்படி கிணற்றில் தவறி விழுந்த பெண்.. இறுதியில் நடந்த சோகம் !

செல்போனில் பேசியப்படி கிணற்றில் தவறி விழுந்த பெண்.. இறுதியில் நடந்த சோகம் !

செல்போனில் பேசியப்படி கிணற்றில் தவறி விழுந்த பெண்.. இறுதியில் நடந்த சோகம் !
X

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குட்டகந்தூர் பகுதியில் திருமூர்த்தி - லக்சனா தம்பதியர் வசித்து வந்தனர். லக்சனா வீட்டில் இருக்கும்போது அவரது செல்போனுக்கு கால் வந்துள்ளது.

பின்னர் செல்போனில் பேசியப்படி வெளியே சென்ற அவர், வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் செல்போனில் பேசியபடி கால்தவறி

கிணற்றில் விழுந்துள்ளார். இதனை கண்ட உறவினர்கள் உடனடியாக விரைந்து சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். எனினும் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் லக்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் உறவினர்கள் இடையே விசாரணை நடைபெற்று வருகிறது.

newstm.in

Next Story
Share it