புகார் கொடுக்க வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்!

புகார் கொடுக்க வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்!

புகார் கொடுக்க வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய போலீஸ்!
X

குடும்ப பிரச்னை காரணமாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணை விசாரணை என்ற பெயரில் எஸ்.ஐ ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே மேக்கோடு பகுதியை சேர்ந்த ஜோஸ்பின் என்ற பெண் தன்னிடம் பணம் மோசடி செய்த நபர் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். பளுகல் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம் அதனை விசாரிக்கும் போது புகார் அளித்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அப்பெண் கர்ப்பமானதாக தெரிகிறது. இந்நிலையில் ஜோஸ்பினை குலசேகரம் அருகே தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற எஸ்.ஐ சுந்தரலிங்கம் கட்டாய கருக்கலைப்பு செய்ய முயற்சி செய்துள்ளார். 


அப்பெண் கூச்சல் போடவே, பொதுமக்கள் கூடியதை தொடர்ந்து அங்கிருந்து உதவி ஆய்வாளர் தப்பி ஓடி விட்டார். சில நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜோஸ்பின் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்து விட்டு உள்ளிருப்பு போராட்டதில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it