எங்க வீட்லல்லாம் முட்டி வரைக்கும் சாக்கடை தண்ணீர் நிக்குது... கஸ்தூரியின் ட்வீட்-க்கு தக்க பதிலடி கொடுத்த திமுக ஆதரவாளர்கள்..!!
திமுக ஆதரவாளரும், விசிகவின் முக்கிய பிரமுகருமான டாக்டர் ஷர்மிளா ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருக்கிறார். அதில், "மழையை பற்றி ஓவரா பேசிப் பேசி ஒரு பீதியை கிளப்ப முயற்சி பண்றாங்களோன்னு தோணுது... முன்எச்சரிக்கையுடன் இருங்க.. பாதுகாப்பா செயல்படுங்க... ஆனா மழையை ரசிக்க மறந்துடாதீங்க... நமக்கு வருஷத்துல ரெண்டு மாசம் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
ஷர்மிளாவின் இந்த பதிவை பார்த்தமே நடிகை கஸ்தூரி ஷர்மிளாவுக்கு பதிலடி தந்துள்ளார். கஸ்தூரி தன்னுடைய ட்வீட்டில், "ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது. எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல . உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்" என்று கிண்டலடித்துள்ளார்.
ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது.
— Kasturi (@KasthuriShankar) October 16, 2024
எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல .
உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்.#ChennaiFloods https://t.co/cdluBwjlnW
ரோம் நகரம் எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். இந்தம்மா மழைய ரசிக்க சொல்லுது.
— Kasturi (@KasthuriShankar) October 16, 2024
எங்க வீட்லல்லாம் முட்டி வரை சாக்கடை தண்ணி முட்டி நிக்குது. பழைய பில்டிங். மழைய ரசிக்க முடியல .
உங்க மாடி வீட்டுல இருக்கவச்சு சூடா டீ சம்சா குடுத்தீங்கன்னா நாங்களும் ரசிப்போம்.#ChennaiFloods https://t.co/cdluBwjlnW
இதைக்கண்ட திமுக தொண்டர்களோ, பதிலுக்கு கஸ்தூரி வீட்டையே வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர்.. அந்த வீடியோவில் சாலைகளில் எங்குமே தண்ணீர் தேங்கவில்லை.. மழை பெய்ததற்கான அறிகுறியும் அதில் தென்படவில்லை.. முட்டிவரைக்கும் சாக்கடை தண்ணீர் இருப்பதாக கஸ்தூரி சொன்ன நிலையில், திமுகவினர் இப்படியொரு வீடியோவை எடுத்து கஸ்தூரிக்கு பதிலடி தந்துள்ளனர்.
இதனிடையே, கஸ்தூரிக்கு ஷர்மிளா ரிப்ளை தந்துள்ளார்.. அதில், "வந்துட்டாய்யா வரிஞ்சுகட்டிகிட்டு! சங்கிகளுக்கு பிடில் வாசிக்கிறது உங்களுக்கு கை வந்த கலையாச்சே! என்னேரமும் தண்ணியில இருந்தா, எல்லாமே தண்ணியாத்தான் தெரியும்.இது உங்க வீடு தாணே மேடம்! முழங்கால் அளவுக்கு கூடத் தண்ணியில்லை, இதுல முட்டி வரைக்கும் தண்ணி நிக்குதுன்னு பொய் வேற" என கஸ்தூரியின் வீட்டை சுட்டிக்காட்டி பேசியிருக்கிறார்.
வந்துட்டாய்யா வரிஞ்சுகட்டிகிட்டு!
— Dr M K SHARMILA (@DrSharmila15) October 16, 2024
சங்கிகளுக்கு பிடில் வாசிக்கிறது உங்களுக்கு கை வந்த கலையாச்சே!
என்னேரமும் தண்ணியில இருந்தா, எல்லாமே தண்ணியாத்தான் தெரியும்
இது உங்க வீடு தாணே மேடம்! முழங்கால் அளவுக்கு கூடத் தண்ணியில்லை, இதுல முட்டி வரைக்கும் தண்ணி நிக்குதுன்னு பொய் வேற🙄 https://t.co/dbAoCf7bkB pic.twitter.com/MJ3Hf1PCxG