1. Home
  2. தமிழ்நாடு

தொடரும் போர் பதற்றம்..! வான்வழி தாக்குதலில் 18 பேர் பலி…!

1

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலிலிருந்து 251 பேரைப் பணய கைதிகளாகக் காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் அரசுப் போர் அறிவித்தது. இதுவரை ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் மீட்டுள்ளது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகள்மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் இதுவரை சுமார் 41 ஆயிரத்துக்கு அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காசாவின் வட மேற்குக்கரையில் உள்ள துல்கர் அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துல்கர் முகாமில் இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் ஏற்பட்டதாகப் பாலஸ்தீன பிரிவுகளின் ஒருங்கிணைப்பாளர் பைசல் சலாமா தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like