1. Home
  2. தமிழ்நாடு

இனி இந்த பல்கலைக்கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர்... முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு!

1

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா (வயது 86) வயது முதிர்வு காரணமாக அண்மையில் காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ரத்தன் டாடா உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மராட்டிய முதல்-அமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே மற்றும் மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர். 

ரத்தன் டாடா

இந்நிலையில், மறைந்த ரத்தன் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக மராட்டிய மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக் கழகத்திற்கு ரத்தன் டாடா பெயர் சூட்டப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். அதன்படி இப்பல்கலைக்கழகம் இனிமேல் ரத்தன் டாடா மராட்டிய மாநில திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படும்.

ரத்தன் டாடா

மராட்டிய திறன் மேம்பாட்டு பல்கலைக்கழகம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Trending News

Latest News

You May Like