1. Home
  2. தமிழ்நாடு

சென்னையின் மொத்த கொரோனா பாதிப்பை ஒரே நாளில் நெருங்கிய அமெரிக்கா!

சென்னையின் மொத்த கொரோனா பாதிப்பை ஒரே நாளில் நெருங்கிய அமெரிக்கா!


அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 71,787 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் அமெரிக்காவில் தான் நோய் பாதிப்பு அதிகம் உள்ளது. 32 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.36 லட்சம் பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14.6 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்த நிலையில், தற்போது பரவல் வேகமெடுத்துள்ளது. இறப்பு எண்ணிக்கை குறைந்திருந்தாலும் கூட ஒரே நாளில் 71,787 பேர் பாதிக்கப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் இதுவரையில் 85 ஆயிரம் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Trending News

Latest News

You May Like