கனடாவை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி!

டி20 உலகக்கோப்பை தொடக்க போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதின.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல் பந்துவீச்சைதேர்வு செய்தார்.
முதலில் ஆடிய கனடா 194 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து 195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய அமெரிக்கா, 17.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அசத்தல் வெற்றி பெற்றது. அமெரிக்க அணியில் ஆரோன் ஜோன்ஸ் 40 பந்துகளில் 10 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் விளாசினார்.