இருவரும் இணைந்து பாஜகவைச் சேர்ந்தவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க போகிறார்கள்.. கலாய்த்த உதயநிதி !

இருவரும் இணைந்து பாஜகவைச் சேர்ந்தவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க போகிறார்கள்.. கலாய்த்த உதயநிதி !

இருவரும் இணைந்து பாஜகவைச் சேர்ந்தவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க போகிறார்கள்.. கலாய்த்த உதயநிதி !
X

அதிமுக செயற்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற காரசார விவாதம் நடைபெற்றது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நீண்ட விவாதம் நடந்தும் நேற்று அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.

இந்நிலையில் செயற்குழு கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கே.பி.முனுசாமி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.

இது அதிமுகவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக பாஜகவை சேர்ந்த ஒருவர் கூட அறிவிக்கப்படலாம் என திமுக இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளருக்கு போட்டிப் போட்டுக்கொள்கின்றனர் என கூறியுள்ளார். மேலும், இவர்கள் இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டாலும் திடீரென இருவரும் இணைந்து பாஜக உறுப்பினரை கூட முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்து அறிவிக்க வாப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it