1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக கூட்டணியில் தொடர்ந்து இழுபறி..! காரணம் இது தான்..!

Q

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதில் மும்முரம் காட்டி வருகிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை தற்போது வரை யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், பெஞ்சமின் ஆகியோர் தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதாவை சந்தித்து பேசினர். பின்னர் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த குழுவினர் இதுவரை சந்தித்து பேசவில்லை.
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணியிடம் அதிமுக நிர்வாகிகள் கூட்டணி குறித்து மறைமுகமாக பேசி வருகிறார்கள். இதில் பாமகவுக்கு 7 இடங்களும், ஒரு மாநிலங்களவை எம்பி சீட் வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. தேமுதிக சார்பிலும் 5 இடங்களும், ஒரு மாநிலங்களவை எம்பி சீட் கேட்டு வருகின்றனர்.
ஆனாலும் கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்க முடியாமல் அதிமுக திணறி வருகிறது. காரணம் பாமக போட்டியிட விருப்பம் தெரிவித்த தொகுதிகளில் தேமுதிகவும் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் தர்மபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 நாடாளுமன்ற தொகுதிகளை கேட்டு வருகிறது. அதேநேரம், தேமுதிகவும் பாமக கேட்டுள்ள கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சில தொகுதிகள் எங்களுக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.
இதனால் பேச்சுவார்த்தை முடிவடையாமல் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது. அதேநேரம், அதிமுக சார்பில் பாமக, தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்பி சீட் தர முடியாது என்று கூறியுள்ளது. அதுவும் பேச்சுவார்த்தையின் பின்னடைவுக்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like