இட்லி கடை படத்தின் ட்ரைலர் வெளியானது..!
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த இட்லி கடை திரைப்படம் வருகிற அக்.1 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நித்யா மெனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் அருண் விஜய் வில்லனாகவும் நடித்துள்ளார்.படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14-ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது.
தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரக்கனி, பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராகவும் கிரண் கௌசிக் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படம் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், டிரெய்லரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி, இன்று கோவை ப்ரோஷன் மாலில் இட்லி கடை படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.