பட்டையைக்கிளப்பும் 'விடாமுயற்சி' ட்ரெய்லர் வெளியானது..!

‘பிரேக்டவுன்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்தான் ‘விடாமுயற்சி’ திரைப்படம்.
நடிகர்கள் அஜித், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாவதாக படக்குழு அறிவித்தது.
இதற்காக, அந்த ஹாலிவுட் படக்குழு காப்புரிமை கேட்டு மெயில் அனுப்பியதால் பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது.
பின்பு, காப்புரிமை பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படவே, இந்த மாதம் அல்லது அடுத்த மாதத் தொடக்கத்தில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில், இன்று மாலை 6.40 மணிக்கு ‘விடாமுயற்சி’ படத்தின் டிரெய்லர் வெளியாகிறது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது