சென்னையில் கார் பார்க்கிங் பிரச்னையை தத்ரூபமாக எடுக்கப்பட்ட "பார்க்கிங்" படத்தின் ட்ரைலர் வெளியீடு..!

காலம் காலமாக சென்னை மக்கள் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை என்றால் அது கார் பார்க்கிங் பிரச்சனை என்று சொல்லலாம். இக்கருவை மையமாக எடுக்கப்பட்ட படம் தான் 'பார்க்கிங்'. திரில்லர் டிராமாவான இந்த திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்த நிலையில், 'பார்க்கிங்' படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியானது.. சென்னையில் நடக்கும் விஷயங்களை அப்படியே தத்ரூமாக எடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்
இதோ அந்த ட்ரைலர் உங்களுக்காக...