‘லால் சலாம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது..!
நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள திரைப்படம், லால் சலாம். இத்திரைப்படத்தில் விஷ்னு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா என பலர் நடித்திருக்கின்றனர். இதன் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 26ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து, இன்னும் சில நாட்களில் இப்படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.அத்துடன் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த பொங்கலுக்கே இப்படம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் திட்டமிட்டப்படி படத்தினை ரிலீஸ் செய்ய முடியவில்லை.
இதனையடுத்து வரும் 9 ஆம் தேதி 'லால் சலாம்' படம் வெளியாகவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.