'கூலி' படத்தின் ட்ரெய்லர் வரும் ஆகஸ்ட் 2ல் வெளியாகிறது!
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
மேலும் ‘கூலி’ படத்தின் இசை வெளியீட்டுவிழா ஆகஸ்ட் 2ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
The wait is over! The highly anticipated #Coolie Trailer from August 2💥#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #AamirKhan @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan @hegdepooja @anbariv @girishganges… pic.twitter.com/DWERTKRaGL
— Sun Pictures (@sunpictures) July 28, 2025