நவராத்திரி நிகழ்ச்சியில் நடந்த சோகம்..! கர்பா நடனம் ஆடிய 10 பேர் மாரடைப்பால் உயிரிழப்பு!
வடமாநிலங்களில் நவராத்திரி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் நவராத்திரியையொட்டி, புகழ் பெற்ற கர்பா நடனமாடி, ஆண்களும், பெண்களும் கொண்டாடுவது வழக்கம். பாரம்பரிய உடை அணிந்து, ஆண்களும் பெண்களும் விடிய விடிய நடனமாடி, உற்சாகத்தை வெளிப்படுத்துவர்.
அந்த வகையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கர்பா நடனமாடிய 10 பேர் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த 10 பேரும், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் எனக் கூறப்படுகிறது.
நவராத்திரி தொடங்கியது முதல் தற்போது வரை 609 பேருக்கு அங்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் மாரடைப்பு ஏற்பட்டதாக ஆம்புலன்ஸ் சேவைக்கு 521 அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.