1. Home
  2. தமிழ்நாடு

நீச்சல் விளையாட்டில் நிகழ்ந்த சோகம்..! அமெரிக்க சிறுமியின் கால் துண்டிப்பு..!

1

அமெரிக்க நாடான ஹாண்டுராஸ், கரீபியன் கடலையொட்டி அமைந்துள்ளது. இந்த நாட்டின் கடற்கரை பகுதிகளில் அதிக அளவிலான நீச்சல் பயிற்சிகளும், நீச்சல் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

USA

அந்த வகையில் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி அன்னாபென் கார்ல்சன், தனது பெற்றோருடன் ஹாண்டுராசில் உள்ள பெலிஸ் கடற்கரை பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற நீச்சல் விளையாட்டிலும் அவர் கலந்து கொண்டார்.

அப்போது திடீரென அன்னாபென் கார்ல்சனை சுறா மீன் தாக்கியது. இதில் நிலைகுலைந்த அச்சிறுமி, கடினமாக போராடி சுறாவின் பிடியில் இருந்து மீண்டார். அவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் மீட்டு கடற்கரைக்கு கொண்டு வந்தனர். 

USA

இருப்பினும் இந்த சம்பவத்தில் சிறுமியின் வலது கால் துண்டானது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி அன்னாபென் கார்ல்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெலிஸ் கடற்கரை பகுதியில் சுறாமீன் தாக்குதல் நடைபெறுவது மிகவும் அரிதான நிகழ்வு என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like