1. Home
  2. தமிழ்நாடு

தொடரும் சோகம்..! ஆன்லைன் ரம்மியால் 51 வயது முதியவர் தற்கொலை!

1

சென்னை சாலிகிராமம சத்யமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (51). இவர் தனியார் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராகப் பணியாற்றி வந்தார். கிருஷ்ணமூர்த்தி ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த 3 வருடங்களாக விளையாடிச் சுமார் ரூ.15 லட்சம் பணத்தை இழந்துள்ளார். இழந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்பதால் கடன் வாங்கி விளையாடியுள்ளார். இதனால், கடன் கழுத்தை நெரித்ததால் மனஉளைச்சலுக்கு ஆளானார்.

இதனிடையே, நேற்று தனது பிள்ளைகளுக்கு இதுவே தனது இறுதி நாளெனக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே பதறிய அடித்துக்கொண்டு வந்து பார்த்துத் தூக்கில் சடலமாகத் தொங்கியதை கண்டு அழுது கதறினர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்ததனர். இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like