1. Home
  2. தமிழ்நாடு

கோபி சுதாகர் நடிக்கும் படத்தின் டைட்டில் டீசர் வெளியானது..!

Q

'பரிதாபங்கள்' என்ற பெயரில் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல்வேறு விஷயங்களை நகைச்சுவையுடன் வீடியோக்களாக வெளியிட்டு 6 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்கள் பெற்றுள்ளனர் கோபி மற்றும் சுதாகர்.

பொது மக்களிடம் நிதி கிடைத்ததை அடுத்து, 'ஹே மணி கம் டுடே, கோ டுமாரோ' என்ற தலைப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தனர். அந்தப் படத்தை கைவிட்டவர்கள் புதிய படம் ஒன்றை தயாரித்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்கள் தற்போது புதிய படம் ஒன்றை தயாரித்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், விடிவி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்சன்ஸ் தயாரிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தின் தலைப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கோபி சுதாகரின் பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ஓ காட் பியூட்டிபுல் ( Oh God Beautiful ) என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை விஷ்ணு விஜய் இயக்குகிறார்.

Trending News

Latest News

You May Like