1. Home
  2. தமிழ்நாடு

‘விடாமுயற்சி’ படத்தின் Third Look போஸ்டர் வெளியானது!

1

அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா, உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், அடுத்தடுத்து 2 போஸ்டர்களை வெளியிட்டு அந்த விமர்சனங்களை தவிடுபொடியாக்கியது படக்குழு.

இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் அடுத்த போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த போஸ்டரில் மீண்டும் இளமையான கெட்டப்பில் அஜித், திரிஷாவுடன் உள்ளார். முதல் இரண்டு போஸ்டர்கள் நரை முடியுடன் இருந்த அஜித், தற்போது மீண்டும் கருப்பு நிற முடியுடன் உள்ளார்.

எனவே இந்த லுக் பிளாஷ் பேக் லுக்காக இருக்கலாம் என ரசிகர்கள் தங்களது யூகத்தை சொல்லி வருகிறார்கள். விடாமுயற்சியின் ஷூட்டிங் தற்போது அஜர்பைஜானில் நடந்து வருவதாகவும், இன்னும் ஹைதராபத்தில் இறுதிகட்ட ஷீட்டிங் மட்டும் மீதம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


 

Trending News

Latest News

You May Like