தொடரும் பதற்றம்..! தமிழக வழக்கறிஞர் வெட்டிப் படுகொலை..!
பிரபல வழங்கறிஞர் சத்யநாராயணனிடம் ஜூனியராக பணியாற்றி வந்த கண்ணன் என்பவர் நீதிமன்றம் அருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து கொலையாளி அருகில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். முன்னதாக இன்று காலை தஞ்சையில் ஆசிரியை பள்ளி வகுப்பறையில் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது