1. Home
  2. தமிழ்நாடு

பரீட்சையில் மாணவனின் பதிலை பார்த்த ஆசிரியருக்கு கிறுகிறுன்னு போனது தான் மிச்சம்..!

1

டெல்லியில் நடந்த பள்ளி தேர்வில் டெல்லியில் நடந்த பள்ளி தேர்வில் "இதயத்தின் செயல்பாடுகள்" என்ற தலைப்பில் இதயத்தின் படம் வரைந்து, பாகங்களை குறிப்பிடுக" என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு மாணவர் ஒருவர் தன்னுடைய இதயத்தை படமாக வரைந்து, இதயத்தின் நான்கு பாகங்களிலும் ஹரிதா, பிரியா, ரூபா, நமீதா, பூஜா என்று தன்னுடைய தோழிகளின் பெயர்களை எழுதியதுடன், இந்த பெண்கள் பற்றி சிறு குறிப்பையும் எழுதிவைத்தார். அந்த மாணவன் எழுதிய பதில் இதுதான்:

என்னுடைய இதயத்தின் வலது ஆட்ரியத்தில் உள்ளவர் ஹரிதா.. என்னுடைய பள்ளித்தோழி.. இடது ஆட்ரியத்தில் உள்ளவர் பிரியா.. என்னுடன் எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் சாட்டிங் செய்வார்.. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும்..இதயத்தின் வலது வென்ட்ரிக்கிளில் உள்ளவர் பூஜா.. இவள் என்னுடைய முன்னாள் காதலி.. அதனால்தான், அழுத முகம் போல அவளை வரைந்து அடையாளப்படுத்தியிருக்கிறேன்..இதயத்தின் இடது வென்ட்ரிக்கிளில் உள்ளவர் ரூபா.. ஸ்னாப் சாட்டில் என்னுடன் சாட்டிங் செய்வார். அவள் மிகவும் அழகாக இருப்பாள்"

இதயத்தின் கீழ் பகுதியில் உள்ளவர் நமீதா.. என்னுடைய சொந்தக்கார பொண்ணு.. அவளுக்கு தலைமுடி நீளமாக இருக்கும்.. பெரிய கண்கள் அழகா இருக்கும்.. அதனால்தான், பெரிய கண்கள் வரைந்துள்ளேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த பதிலை பார்த்ததுமே, விடைத்தாள் திருத்தும் டீச்சர் 10 மார்க்குக்கு முட்டை மதிப்பெண் தந்துவிட்டார்.அவர் வரைந்த இதயம் வரைபடம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த பதிவை 6.43 கோடி பேர் பார்வையிட்டு உள்ளனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like