மீண்டும் மாற்றியது தமிழக அரசு..!
அரசுத்துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் திமுக அரசு பொறுப்பேற்றட பிறகு கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக என்று சொல்லும் அளவிற்கு பல அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். அந்தவகையில் தற்போது மேலும் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
தமிழகத்தில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
* சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளராக தாரேஷ் அகமது நியமனம்
* நில சீர்திருத்தத் துறை ஆணையராக வெங்கடாச்சலம் நியமனம்
* பொதுத்துறை கூடுதல் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவஞானம் நியமனம்
* வருவாய் நிர்வாக ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி கலையரசி நியமனம்.
* நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மலர்விழியை நியமனம்.
* உள்துறை சிறப்பு செயலாளராக சுகந்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக சந்திரகலா நியமனம்
* சமூக நலத்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதவல்லியை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* நகராட்சி நிர்வாக கூடுதல் செயலாளராக மகேஸ்வரி ரவிகுமார் நியமனம்
* ஊரக வளர்ச்சித் துறை சிறப்பு செயலாளராக ஜெயகாந்தன் நியமனம்
* தமிழக பொதுத்துறை துணை செயலாளர் பத்மஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.