அடுத்தடுத்து தலிபான்களின் தடாலடி! பெண்கள் முகத்தை மூடணும், ஆண்கள் தாடி வளர்க்கணும்..!
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்குப் பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் முன்பு தலிபான்கள், தங்களின் ஆட்சி முந்தைய ஆட்சிபோல் கொடூரமாக இருக்காது என்றனர். ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடத்தப்படும் எனக்கூறிய அவர்கள் பிறகு நாளுக்கு நாள் கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கி உள்ளனர்.
இந்நிலையில் தலிபான்கள் அடுத்ததாகப் புதிய விதிகளை அமல்படுத்தி உள்ளனர்.
அந்த வகையில், பெண்கள் முகத்தையும், உடலையும் முழுவதுமாக மூட வேண்டும். ஆண்கள் தாடி வளர்க்க வேண்டும். மத வழிபாட்டு நிகழ்வுகளைத் தவிர்க்கக் கூடாது.கார் டிரைவர்கள் பாடல்களை ஒலிக்க விடக் கூடாது கார்களில் ஆண்கள் துணை இல்லாமல் பெண்களை அழைத்து செல்லக்கூடாதுஎனக்கூறியுள்ளனர். தலிபான் தலைவரான ஹிபத்துல்லா அகுந்த்சாதாவால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்து உள்ளனர்.
இந்த விதிகளைப் பின்பற்றப்படுகிறதா எனக் கண்காணித்து வரும் அமைச்சகம், இதனை மீறியதற்காக ஆயிரகணக்கானோரை கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.